×

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு: ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை வராது

* தற்போது வரை 1,914 படுக்கைகள்* 134 படுக்கைகள் அதிகரிக்க முடிவு* டீன் டாக்டர் தேரணிராஜன் தகவல்சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனை, கிங்ஸ் இன்ஸ்டிடியூட், ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றின் முதல் அலையின் போது பாதிப்பு அதிகமாக இருந்தாலும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தேவை ஏற்படவில்லை. ஆனால், இரண்டாவது நிலையில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு 30 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் முழுமையாக நிரம்பியுள்ளதால் பலர் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சென்னைக்கு இரண்டு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார். அதன்படி இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகிய இருவரும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஆரம்பத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தற்போது மருத்துவமனைக்கு தொற்று பாதிக்கப்பட்டு சென்றால் அவர்களுக்கு என்ன மாதிரியான படுக்கைகள் தேவைப்படுகிறது என்பதை தயார் ெசய்து அரைமணி நேரத்திற்குள் ஒதுக்கி தருவதாக நோயாளிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியதாவது: ஒவ்வொரு வார்டிலும் யாரெல்லாம் ஆக்சிஜனிலிருந்து விடுபட்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு தேவையான மற்றொரு படுக்கை உடனடியாக மருத்துவர்கள் தயார் செய்து, ஆக்சிஜன் படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. ேமலும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் 1,242, ஆக்சிஜன் கான்சன்ரேட்டர் படுக்கைகள் 280, ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 392 என 1,914 படுக்கைகள் தற்போது உள்ள நிலையில் மேலும் 134 அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடியும் நிலையில் மொத்தம் 2050 படுக்கைகளாக இருக்கும். மேலும் ஆக்சினேட்டரை முழுமையாக பயன்படுத்தி இரண்டு நாட்களில் 550 ஆக்சினேட்டர் முழுமையாக ஏற்படுத்தி இருக்கிறோம். இதனால் உடனுக்குடன் உள்நோயாளிகளை அனுமதிக்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வருபவர்கள் தாமதமின்றி அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தொடர்வது நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனால் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்படாது….

The post ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு: ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை வராது appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Hospital ,Dean ,Dr. ,Theranirajan ,Chennai ,Corona ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...